Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 16 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித், எம்.எம்.அஹமட் அனாம்.
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் முன்னெடுத்துள்ள சைக்கிள்; பயணத்தின் மூலம் அவர் மட்டக்களப்பு நகரை இன்று (16) வந்தடைந்தார்.
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின்; பிரதிநிதிகளும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் பிரதிநிதிகளும் இவரை காந்தி பூங்காவுக்கு முன்பாக வரவேற்றதுடன், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் வி.ரஞ்சிதமூர்த்தி மற்றும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தலைவர் ஓ.கே.குணநாதனும் இவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்குமான ஓய்வூதியக் கொடுப்பனவை வலியுறுத்திய 1,515 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட சாதனைப் பயணத்தை தர்மலிங்கம் பிரதாபன் கடந்த 8ஆம் திகதி வவுனியாவிலிருந்து ஆரம்பித்து, 9ஆவது நாளாகிய நேற்று மட்டக்களப்பு வந்தடைந்தார்;. இதனை அடுத்து, இங்கிருந்து அவர் திருகோணமலைக்குப் பயணமாகின்றார்.
கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்;பாந்தோட்டை, வெல்லவாய, பொத்துவில், மட்டக்களப்பு திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய இடங்கள் ஊடான இவரது பயணமானது எதிர்வரும் 18ஆம் திகதிவரை தொடரும் என்பதுடன், அப்பயணம் வவுனியாவில்; நிறைவடையவுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட சகல பிரஜைகளுக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுவர வேண்டும் என்பதுடன், இதன் மூலம் முதியவர்கள் சுயகௌரவத்துடனும் நிம்மதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும் என்பதே தனது பயணத்தின் நோக்கம் என தர்மலிங்கம் பிரதாபன் தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago