2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வு பெறும் பணிப்பாளருக்கு கௌரவம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2019 ஜூலை 08 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

   காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெறும் தேசமான்ய எம்.ஏ.சீ.எம்.பதுர்தீனை கௌரவிக்கும் வைபவம் காத்தான்குடி பிரதேச பாடசாலைகளின் அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மெரினா பீஜ் மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச பாடசாலைகளின் அதிபர் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.சத்தார் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் உமர் மௌலானா, காத்தான்குடி நகர சபைத்தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் பிரதேச பாடசாலைகளின் அதிபர் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓய்வு பெறும் பிரதேச கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் அதிதிகளால் பொன்னாடை போத்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X