2025 மே 08, வியாழக்கிழமை

ஓய்வுபெற்ற பரீட் அதிபர் கௌரவிப்பு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற எம்.ரீ.எம்.பரீட் அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று (11) நடைபெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்ட அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எம்.ஐ.செயினுலாப்தீன் தலைமையில், சந்தியாற்று வெளியில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், பரீட் அதிபர் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

முன்னதாக மரணமடைந்த அதிபர்களான என்.எம்.ஹஸ்ஸாலி மற்றும் யூ.எல்.எம்.புஹாரி ஆகியோர்கள் இங்கு நினைவு கூரப்பட்டு, அவர்களுக்காக விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

அத்துடன்,  ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தால் வெளியிடப்பட்ட “எம்.ரீ.எம்.பரீட் எனும் ஆளுமை” எனும் நூலும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மாயில் மற்றும் ஆசிரிய ஆலோசகர் எம்.பீ.எம்.நபீர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X