Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அரசாங்கத்தின் ஓரின மனப்பாங்கு, பல்லின மனப்பாங்காக மாற்றமடைய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கடந்த அரசாங்கம், தேசிய நல்லிணக்கத்தின் ஓர் அடையாளப்படுத்தலாக தைப்பொங்கலை தேசிய ரீதியில் முக்கியத்துவப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (13) மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வருடத்தைப்போல் இவ்வருடம் அவ்வாறு தேசிய ரீதியாகத் தைப்பொங்கலை மேற்கொள்வதில்லையென்றும், அவ்வாறு செய்வதால் வீண் செலவுகள் ஏற்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸநாயக்க, பத்திரிக்கை மூலமாக அறிவித்துள்ளார்.
“இப்படியான செயற்பாடுகள், இந்நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்களின் மனங்களைக் காயப்படுத்துவதாகவே அமையும். ஏற்கெனவே, காணாமல் ஆக்கப்பட்டமை, அரசியற்கைதிகள் விடுவிக்கப்படாமை தொடர்பாக மனக்காயப்பட்டுள்ளார்கள். மேலும், மேலும் தமிழர்களின் மனங்களைக் காயப்படுவத்துவது, தேசிய நல்லிணக்கத்தைத் திட்டமிட்டு, மறுப்பதாகவே அமையும்” என்றார்.
'பேரினமே இந்நாட்டின் ஓரினம்', 'இந்நாடு சிங்கள பௌத்த நாடு' போன்ற பேரினவாத வாயாடல்களை, ஏனைய தேசிய இனங்கள் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும் என்றும் ஸ்ரீநேசன் எம்.பி வினவினார்.
அரசாங்கத்தின் இந்த ஓரினமனப்பாங்கு, பல்லின மனப்பாங்காக மாற்றமடைய வேண்டும். இல்லையேல், தேசிய நல்லிணக்கம் வெறும் பேச்சில் மட்டுமே இருக்குமென்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago