2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  சின்னச்சவுக்கடிக் கிராமத்திலுள்ள நெல் வயலிலிருந்து இன்று (28) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.

அவர் தனது வயலில் களை நாசினி தெளித்துக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு தென்பட்டவுடன் அது குறித்து அவர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் பொலிஸாரும் அதனை மீட்டு செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புழக்கத்தில் இருந்த கையெறி குண்டு வகையைச் சேர்ந்தது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X