Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
காசோலை மோசடி செய்த இருவருக்கு சிறைத்தண்டனை விதித்ததுடன், நட்டஈடு செலுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்குகளை நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
02.12.2010 அன்று 6 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் காசோலையை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் மேற்படி நபர்களில் ஒருவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையை வ நீதிபதி விதித்ததுடன், ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் உத்தரவிட்டார்.
மற்றுமொருவருக்கு எதிராக 05.12.2012 அன்று செய்யப்பட்ட முறைப்பட்டின் அடிப்படையில் எதிரிக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனையை நீதிபதி விதித்ததுடன், ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இவர்கள் இருவரும் நட்டஈடு செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
4 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago