Niroshini / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தீர்வுத் திட்டம் இல்லை என்று எம்மவர்களில் பலர் கூறுவது வேதனையளிக்கிறது என கிழக்கு மாகாண விவசய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, சித்தாண்டியில் செவ்வாய்க்கிழமை(02) மாலை நடைபெற்ற பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்;களையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில்
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது எமக்கு மிக முக்கியமான விடயமாகும். இது சம்மந்தமாக எமது கட்சி உழைத்துக் கெண்டிருக்கின்றது. எமது கட்சி தொடங்குகின்ற போதே தமிழ் மக்களுக்குத் தேவையான, இந்த நாட்டுக்குப் பொருத்தமான ஓர் அரசியலமைப்பை முன்வைத்தோம்.
தொடர்ச்சியாக வந்த எல்லாத் தேர்தல்களிலும் நாம் தீர்வு சம்மந்தமாக முன்வைத்தோம். ஆனால், மிகப் பெரிய வேதனை என்னவென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தீர்வுத் திட்டம் இல்லை எனப் பலர் சொல்லுகின்றார்கள்.
அதிலும் நாங்கள் அழைத்து வந்து சிம்மாசனம் ஏற்றி வைத்த ஒருவரைத் தலைவராக வைத்துக் கொண்டு பலர் செயற்படத்
தொடங்கயிருக்கின்றார்கள். இதுவரை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைத்தமை எல்லாம் தீர்வுத் திட்டங்கள் தான். இதனை ஏன் அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றார்.
' தற்போது தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலில் எமக்கு சமஷ்டி என்று சொல்லப்படுகின்ற கூட்டாட்சி ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்கின்ற விடயத்தில் ஒருமித்த கருத்துடையவர்களாக இருக்கும் வகையில் இப்போது இருந்தே சிந்தித்து செயற்பட வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.
அவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில், உலக நாடுகள் ஒற்றுமையாக இருப்பதற்கென்று அரசியல் விஞ்ஞானிகள் கூறியிருக்கின்ற இந்த கூட்டாட்சி என்கின்ற சமஷ்டி ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில் கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .