Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Yuganthini / 2017 மே 14 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு - கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குடும்பிமலை முருகன் ஆலயத்துக்குச் செல்ல இராணுவத்தினரால் விதிக்கப்பட்ட தடை, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தின் நடவடிக்கையை அடுத்து, நீக்கப்பட்டது.
அவ்வாலயத்தில், வருடா வருடம் பிரதேச மக்களால் பூசைகள் மேற்கொள்ளப்படுவது வழமை. இம்முறை அங்கு திருவிழா மேற்கொள்ளச் சென்ற மக்களுக்கு, குடும்பிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமின் அதிகாரிகளால், தடைவிதிக்கப்பட்டது.
மேற்படி இடத்தில் யுத்த காலத்தின் பின்னர் பௌத்த வணக்கஸ்தலம் அமைக்கப்பட்டு, வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அங்கு முருகன் ஆலயத்துக்குச் செல்வதற்கு, ஆலய நிர்வாகத்தினருக்குத் தடை விதிக்கப்பட்டது.
குறித்த விடயத்தை கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கத்தின் கவனத்துக்கு ஆலய நிர்வாகத்தினர் கொண்டு வந்ததையடுத்து, தரவையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் அதிகாரி பிரிகேடியர் குலதுங்கவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போது, மேற்படி விடயம் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது.
பின்னர் அந்த அதிகாரியின் நெறிப்படுத்தலின் பேரில், தடை நீக்கப்பட்டு, முருகன் ஆலயத்துக்குச் செல்லவும் உற்சவத்தை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், இனிமேல் இவ்வாறான தடைகள் இடம்பெறாது எனவும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் பிரிகேடியர் குலதுங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
25 May 2025