Thipaan / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கிராமத்தில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நபர், வியாழக்கிழமை இரவு (20) உயிரிழந்துள்ளார் என்று, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கு கிராமத்தின் காளிகோவில் வீதியிலுள்ள மரண வீடொன்றில் கடந்த மார்ச் 19ஆம் திகதியன்று, குடும்பத்துக்குள் ஏற்பட்ட கைலப்பில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உட்பட இரண்டு பெண்களும் ஏழு ஆண்களுமாக 9 பேர் காயமடைந்தனர்.
இதில் சங்கர் (வயது 35) எனும் நபர் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சண்டை தொடர்பில் 15 பேர் பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .