2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கொடுவாமடு மீள்சுழற்சி நிலையத்துக்கு உக்காத கழிவுகள்

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் நகர சபைப் பிரிவில் சேகரிக்கப்படும் உக்காத கழிவுகள் தற்போது கொடுவாமடுவிலுள்ள  மீள்சுழற்சி நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாக நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், இன்று (20)  தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கழிவுகளை அப்புறப்படுத்தி அவற்றில் முடிந்தவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் நடவடிக்கை, சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பணித்திருந்தார்.

இந்நிலையில், கொடுவாமடுவிலுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு குப்பைகளைக்  கொண்டுசெல்லும் பணி கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும், தற்போதைக்கு உக்காத கழிவுகளே அங்கு அனுப்பப்படுகின்றன.

உக்கக்கூடிய கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான நிர்மாணிப்பு வேலை இன்னமும் கொடுவாமடுவில் பூர்த்தியடையாததால், அவை அங்கு அனுப்பப்படவில்லை.

உக்கக்கூடிய கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கான நிர்மாணிப்பு வேலை வெகு விரைவில் பூர்த்தி அடையவுள்ள நிலையில்,  உக்கக்கூடிய கழிவுகளும் கொடுவாமடு மீள்சுழற்சி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், செங்கலடி ஆகிய பிரதேச மற்றும் நகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில்  சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரித்து அவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்காக  ஐ.நா யுனொப்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் கொடுவாமடுவில் திண்மக்கழிவு முகாமைத்துவ மீள்சுழற்சி  நிலையம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .