Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
'எனது கணவர் உட்பட பல பெண்களின் கணவர்கள்; காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடுவதற்கான சட்ட ஒழுங்குமுறை எமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கின்றதா'இவ்வாறு திருமதி ஜெயதீபா பத்மசிறி கேள்வியெழுப்பினார்.
அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவின் அமர்வு, மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அக்குழுவினரிடமே அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒரு வீட்டில் வளர்க்கும் நாய் அல்லது மாடு உள்ளிட்டவை காணாமல் போனால், அவற்றை ஒரு குழுவாக இணைந்து அனைவரும் தேடுகின்றனர். ஆனால், அந்த உரிமை கூட எங்களுக்கில்லை.
என்னைப் போன்று பல பெண்களின் கணவன்மார் காணாமல் போயுள்ளனர். அதேபோன்று, பல தாய்மார்களின் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் நாம்; சேர்ந்து குழுவாக தேடுவதற்கான உரிமை இந்த நாட்டிலுள்ள சட்டத்தில் இருக்கின்றதா?
காணாமல் போனோர் கடத்தப்பட்டோர் திரும்பி வரவில்லை என்றால், மரணச் சான்றிதழ் எடுக்கலாம் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், எனது பிள்ளை அப்பா எங்கே எனக் கேட்டால் மரணச் சான்றிதழை எனது பிள்ளைக்கு காட்டமுடியுமா? எந்த அரசியலமைப்பில் இது சொல்லப்பட்டுள்ளது?
மதம், உரிமை பற்றி கதைக்கின்றோம். அரசியலமைப்பில் எந்தந்த விடயங்கள் வரவேண்டும் என்று கதைக்கின்றோம். ஆனால், கணவன் மனைவி வாழவேண்டும் என்பதைப் பற்றி யாரும் கதைக்காமை ஏன்? அதைப்பற்றிய சட்டமில்லாதது ஏன்?
ஒருவருடைய காணாமல் போன பொருளை கண்டுபிடித்து கொடுப்பதற்கு இந்த நாட்டில் சட்டம் இருக்கின்றது. அந்தப் பொருளை களவாடிய திருடனை கண்டுபிடித்து அந்தப் பொருளை மீட்டெடுத்து கொடுப்பதற்கு சட்டத்தில் நீதியில் இடம் உண்டு. ஆனால், காணாமல் போன ஒருவரை கண்டுபிடிப்பதற்கு சட்டத்தில் ஏன் இடமில்லை? காணாமல் போனோரை கண்டுபிடித்து கொடுப்பதற்கான பொறுப்பு யாருக்கும் இல்லாமல் போகக் காரணம் என்ன? இது ஏன் சட்டத்தில் சொல்லப்படவில்லை?
எங்களின் கணவர்மார்களை இழந்து அவர்களைத்; தேடி அலைந்து அந்த வேதனையில் இதுவரைக்கும் கணவன்மார்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை தெரியாமல் இருக்கின்றோம். ஏன் இந்த நிலை? இந்த நாட்டில் இனி எவரும் காணாமல் போகக் கூடாது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
8 hours ago
9 hours ago