Gavitha / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ. எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து, சிசுவொன்றின் சடலத்தை, பொலிஸார் இன்றுக்காலை மீட்டுள்ளனர்.
மேல்மாடித்தெருவிலுள்ள வீடொன்றில், வைத்தியர்களான கணவன் மற்றும் மனைவி வாடகைக்கு குடியிருக்கின்றனர்.
இவர்களது வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு பிறந்த சிசுவே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசு, கடந்த 27ஆம் திகதி பிறந்துள்ளதாகவும், கொலைச் செய்யப்பட்ட பின்னர் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிசுவின் தாய், தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .