Suganthini Ratnam / 2017 மே 01 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்மாப் பள்ளிவாசலுக்கு நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக முதன்முறையாக நடத்தப்பட்ட தேர்தலில் 23 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்குப் பிராந்திய அலுவலகம் அறிவித்தது.
பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் மேற்படி பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை (30) தேர்தல் நடைபெற்றது.
இந்தப் பள்ளிவாசலுக்கு நிர்வாக சபை உறுப்பினர்களைத்; தெரிவுசெய்வதற்காக 74 பேர் போட்டியிட்டதுடன், இந்தத் தேர்தலில் 703 பேர் வாக்களித்துள்ளனர்.
தெரிவுசெய்யப்பட்ட 23 நிர்வாக சபை உறுப்பினர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் ஒன்றுகூடி தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளுக்கு உரியவர்களைத் தெரிவுசெய்வார்கள் எனவும் மேற்படி திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பாரம்பரிய முறைப்படி நிர்வாகத்தினர் கூடி, புதிய நிர்வாகத்தைப் பிரேரித்து ஆமோதிக்கும் முறை அல்லது ஏகோபித்த அல்லது பெரும்பான்மை ஆதரவுக்கு அமைய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் நடைமுறை இதுவரைகாலமும் பின்பற்றப்பட்டது.
ஆயினும், நிர்வாகத் தெரிவில் எழும் சிக்கல், செல்வாக்கு, அழுத்தம்; என்பவற்றைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் இம்முறை வெளிப்படையாகத் தேர்தலை நடத்தி, அதன் மூலம் நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .