2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

காத்தான்குடியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 மார்ச் 13 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற மோதல் சம்பவத்தைக் கண்டித்தும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பைத் தடைசெய்யக் கோரியும் காத்தான்குடி இஸ்லாமிய பூர்வீக நூதனசாலைக்கு முன்பாக   இன்று (13)  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

ஆயுதக் கலாசாரத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்பதுடன், குற்றவாளிகளுக்கு பிணை வழங்க வேண்டாமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்ட இறுதியில்  காத்தான்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர,  காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் ஆகியோரிடம்   மகஜரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர்.

காத்தான்குடியில் இரண்டு குழுவினர்களுக்கு இடையில்  இடம்பெற்ற மோதல் சம்பவத்தின்போது, கத்திக்குத்து மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில்; இரண்டு குழுக்களைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கல் வீச்சினால் காயமடைந்த இருவர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு  வெளியேறியுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 10 பேர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் 8 பேர் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்;.

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரசாரக் கூட்டம், காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் கடந்த வெள்ளி (10) மாலை இடம்பெறவிருந்த நிலையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த மோதல் சம்பத்தை அடுத்து மேற்படி கூட்டம் இடைநிறுத்தப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .