2025 மே 14, புதன்கிழமை

காத்தான்குடியில் செயலமர்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரசேத செயலாளர் பிரிவிலுள்ள மகளிர் சங்க பிரதிநிதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை நடைபெற்றது.

பிரதேச மகளிர் சங்கங்களை சக்தியுடையதாக மாற்றுதல் எனும் தொனிப் பொருளில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

இங்கு  கருத்து தெரிவித்த காத்தான்குடி பிரதேச செயலாளர் முசம்மில்,

பெண்கள் சமூகத்தின் உருவாக்கத்துக்கும் சமூக கட்டமைப்புக்கும் பாரிய பங்களிப்பு செய்கின்றவர்கள்.

பெண்கள் குடும்பங்களை மேற்பார்வை செய்வதுடன் பிள்ளைகளை கல்வியின் பால் மற்றும் ஆன்மீகத்தின் பால்  வளர்த்து நெறிப்படுத்தும் பாரிய பங்களிப்பையும் செய்கின்றனர்.

ஒரு குடும்பத்தை அபிவிருத்தி செய்வது மற்றும் அந்த குடும்பத்தை சிறப்பாக கொண்டு செல்வது போன்றவற்றிலும் பெண்கள் தமது பூரண பங்களிப்பை வழங்குகின்றனர்.

அரசாங்கம் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கென தனியான அமைச்சு மற்றும் திணைக்களம் என்பவற்றை உருவாக்கி அதனூடாக பெண்கள் நலன் சார்ந்த விடயங்களை கையாண்டு வருகின்றது.

அதில், ஒரு வேலைத்திட்டமாகவே இவ்வாறான செயலமர்வுகளையும் நடத்துகின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X