Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 20 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஊணமுற்றோருக்காக சமூகசேவைத் திணைக்களத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு காத்தான்குடிப் பிரதேச செயலாளர் பிரிவில் 170 பேருக்கு 3,000 ரூபாய் படி மாதாந்தம் வழங்கப்படுவதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.
காத்தான்குடிப் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற சமுர்த்தித்திட்டம் தொடர்பான கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.
மேலும், 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொடுப்பனவாக மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் படி வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
சமுர்த்தித்திட்டத்தின் மூலம் மரணம், திருமணம், குழந்தை பிறப்பு, சிகிச்சை ஆகியவற்றுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன.
சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்கள் தொடர்பில் மீளாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. கிராமங்கள் தோறும் இந்தக் கள ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக கள ஆய்வுப்படிவங்கள் வழங்கப்பட்டு சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதன் அடுத்த கட்டமாக சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கு புதிதாக விண்ணப்பித்துள்ள குடும்பங்கள் தொடர்பிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவர்களிடமிருந்தும் தகவல்கள் பெறப்படவுள்ளன. உரியவர்களுக்கு சமுர்த்தி உதவி போய்ச் சேர வேண்டுமென்ற அரசாங்கத்தின் இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்தக் கள ஆய்வின்போது உண்மையைக் கண்டறிவதற்கு சமூக நிறுவனங்களும் உதவி செய்ய வேண்டும்.
சமுர்த்தித் திட்டத்தைப் பொறுத்தவரையில் சமுர்த்தி வங்கிகள் ஊடாக சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. எனவே, சமுர்த்தி வங்கிகளையும் விருத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்கத்துக்கு சிவில் அமைப்புக்களிடமிருந்து கூடிய ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. சமுர்த்தி திட்டத்தின் ஊடாக பல வேலைத்திட்டங்களை நாம் மேற் கொண்டுவருகின்றோம். சிறுதொழில் முயற்சியாளர்கள் எவரை எடுத்துக் கொண்டாலும், அவர் சமுர்த்தியினால் கடன் பெற்றவராகத்தான் இருக்க முடியும்.
மானியமாக பலருக்கு பல தொழில் உபகரணங்க்ள வழங்கப்பட்டு வருகின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிக்கச் செய்வதற்கான வேலைகளுக்காக உதவிகள் வழங்கப்பட்டு அந்த திட்டம் முன்னெடுத்து வரப்படுகின்றது.
காத்தான்குடி பிரதேச செயலளார் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொந்தராத்து வேலைகளை சமுர்த்தி சங்கங்களினால் செய்து அதிலுள்ள இலாபங்களை சேமித்து அதனை இருப்பில் சும்மா வைத்திருக்காமல் சமூகத்துக்கு பயன் பெறத்தக்க வகையில் வட்டியில்லாத முறையில் உயர்ந்த பட்சமாக ஐம்பதாயிரம் ரூபாய் சுய தொழிலுக்கான கடன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது வட்டியில்லாத சுழற்சிக்கடன் திட்டமாகும். இதன் மூலமும் சிறந்த பயணை பயணாளிகள் பெற்றுள்ளனர். இவ்வாறான திட்டங்களானது அடிமட்டத்திலுள்ள வறிய மக்களை நேரடியாக சென்றடையும் திட்டமாகும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago