2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடியில் 'யூ' வளைவுகளில் வேகத்தடைத் திட்டுக்கள்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதான நெடுஞ்சாலையில் விபத்துகளைக் குறைப்பதற்காக 'யூ' வளைவுகளில் வேகத்தடைத்திட்டுக் கோடுகள் இடும் வேலை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

சமீப நாட்களாக காத்தான்குடி நெடுஞ்சாலையில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இதனால் பலர் உயிரிழந்தும் காயமடைந்தும் உள்ளனர்.

இத்தகைய இழப்புக்களைக் குறைக்கும் முகமாக பிரதான வீதியில் அமைந்துள்ள சகல 'யூ' வளைவுள்ள இடங்களில் வேகத்தடைத் திட்டுக் கோடுகள் இடும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு என்பன இணைந்து   செய்து வருகின்றன. இதனால் வீதியில் செல்லும் வாகனங்கள்;, மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் என்பன வேகக் கட்டுப்பாட்டைப் பேண முடியும் என்றும் அதனால் விபத்துக்களைத் தடுக்க முடியும் என்றும் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X