Suganthini Ratnam / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, காத்தான்குடி முதலாம் குறிச்சி ரெலிகொம் வீதியை அண்டி அமைந்துள்ள பலசரக்குக் கடை ஒன்றிலிருந்து இரண்டு இலட்சம் ரூபாய் பணமும் பொருட்களும்; புதன்கிழமை (09) இரவு திருட்டுப்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழமை போன்று குறித்த கடையை புதன்கிழமை இரவு மூடிவிட்டுச் சென்றதாகவும் இன்று வியாழக்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக வந்தபோது, கடை உடைக்கப்பட்டு திருட்டுப் போயிருந்தமை தெரியவந்ததாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கடையின் கூரையைப் பிரித்துக்கொண்டு உள்நுழைந்தே இத்திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் கூறினார்.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025