2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காத்தான்குடியில் விபத்துகளினால் 09 பேர் உயிரிழப்பு; 64 பேர் காயம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இவ்வருடத்தின் ஜனவரியிலிருந்து ஓகஸ்ட் மாதம்வரையில் விபத்துகள் காரணமாக 09 பேர் உயிரிழந்ததுடன், 28 படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், 36 பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

78 வாகன விபத்துகள் இடம்பெற்றன. 03 வாகனங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

வாகன விபத்துகளை தடுப்பதற்காக பல்வேறு வகையான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மதுபோதையில் வாகனங்களை செலுத்துதல், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது, அலைபேசியில் உரையாடியவாறு வாகனங்களை செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம், வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களைச் செலுத்துதல், உறக்க மயக்கத்தில் வாகனங்களை செலுத்துதல், போக்குவரத்துச் சட்ட ஒழுங்குகளை பின்பற்றாமை உள்ளிட்டவை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன எனவும்  பொலிஸார் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X