2025 மே 07, புதன்கிழமை

கூத்து போட்டியில் மட்டு.மாவட்டம் வெற்றி

Niroshini   / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண கலை, கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண கூத்து விழா மற்றும் கூத்துப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் வெற்றிபெற்றுள்ளது.

கிழக்கு மாகாண கூத்து விழா மற்றும் கூத்துப் போட்டியானது வியாழக்கிழமை( 25) தொடக்கம் நேற்று சனிக்கிழமை இரவு வரை மூன்று தினங்கள் மட்டக்களப்பில் நடைபெற்று வந்தது.

இந்த விழா மற்றும் போட்டிகளில் 12 கலைக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

இதன் இறுதி நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகியம்மன் ஆலய முன்றிலில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் விசேட அதிதியாகவும் கிழக்கு மாகாண கலை,கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டபிள்யு.ஏ.எல்.விக்ரம ஆராய்ச்சி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கூத்து நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

நடைபெற்ற வடமோடிக்கூத்துப்போட்டிகளில் வவுணதீவு விபுலானந்தா கலைக்கழகம் முதல் இடத்தினையும் முனைக்காடு மகா சக்தி கலைக்கலைகழகம் இரண்டாம் இடத்தினையும் மகிழடித்தீவு கண்ணகி கலைக்கழகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

தென்மோடி கூத்துப்போட்டியில் முதல் இடத்தினை பருத்துச்சேனை கலைமகள் கலை மன்றமும் இரண்டாம் இடத்தினை வவுணதீவு விபுலானந்தா கலைக்கழகமும் பெற்றுக்கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X