Yuganthini / 2017 மே 05 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்
மட்டக்களப்பு, மண்முனை பகுதியில் உள்ள கழிவுகளை துப்பரவு செய்யும் பணியினை மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வேலைத்திட்டம் வியாழக்கிழமை (4) ஆரம்பிக்கப்பட்டு இன்றும் (5) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு, இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட குப்பைகள் அனைத்தும் விடுதிக்கல் கிராமத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை (1), குப்பை மேட்டில் தீ ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அப்பிரதேச மக்கள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பிரதேச மக்களுக்கும், பிரதேச சபை செயலாளருக்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலின் போது, தற்போது குப்பை கொட்டப்படும் இடத்தினை துப்பரவு செய்து, குப்பைகளை தரம்பிரிக்கும் இடமாக உபயோகப்படுத்துவதற்கு, மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையிலேயே தற்போது துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும், அப்பிரதேசத்தில் உள்ள கழிவுகள் செவ்வாய்க் கிழமை தொடக்கம் வௌ்ளிக்கிழமை வரை சேகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கதோர் விடயமாகும்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .