2025 மே 07, புதன்கிழமை

காரைதீவில் செயலமர்வு

Niroshini   / 2015 நவம்பர் 24 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சமூக மட்ட சிறுவர் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்குடன் கல்முனை சர்வோதய மாவட்ட வளஅபிவிருத்தி நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிறுவர் வீதி விபத்துக்கள்' எனும் தலைப்பிலான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு நேற்று திங்கட்கிழமை காரைதீவு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை சர்வோதய மாவட்ட வள அபிவிருத்தி நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஐ.எம்.பாரிஸ் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மகளிர் பிரிவு பொலிஸ் அதிகாரி ஏ.எம்.பாரிஸ் மற்றும் ஓய்வு பெற்ற சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.உதுமாலெப்பை ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில், தெரிவு செய்யப்பட்ட தமிழ் மொழி மூலமான நாவிதன்வெளி, சம்மாந்துறை, இறக்காமம் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அரச உத்தியோகத்தர்களும் சமூக மட்ட சிறுவர் கண்காணிப்பு குழு அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X