Thipaan / 2016 நவம்பர் 15 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம். நூர்தீன்
மட்டக்களப்பு, ஏறாவூர் நகரத்தில், வீடொன்றின் கூரையைப் பிரித்து உள்நுளைந்த ஒருவர், இரவு நேர பொலிஸ் விஷேட ரோந்து அணியினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் மற்றொருவர் தப்பியோடி விட்டதாகவும் தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சுஜித் தலைமையிலான விஷேட ரோந்து அணியினர், இன்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை 3.00 மணியளவில் ஏறாவூர் றஹ்மானியா மகா வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள குறுக்கு வீதியில் சென்று கொண்டிருக்கும்போது, அவ்விடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்ததைக் கண்டுள்ளனர்.
அதில் சந்தேகப்பட்ட பொலிஸார் வீட்டுக் கதவைத் தட்டியபோது, எதிரவீட்டுக் கூரையிலிருந்து ஒருவர் தப்பியோடுவது அவதானிக்கப்பட்டுள்ளதையடுத்து, உடனே அந்த வீட்டைச் சுற்றி வளைத்த போது சந்தேகநபரொருவரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.
பொலிஸ் குழுவினர் துரிதமாக செயற்பட்டு துப்பாக்கி சூடு நடாத்தியே தப்பியோட முயற்சித்த சந்தேகநபரைக் கைது செய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தப்பியோடிய நபரைத் தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


51 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
21 Dec 2025