2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, மண்முணை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திபுரம் கிராம அலுவலகப் பிரிவில் இயங்குகின்ற கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் 14 பேருக்கு அடையாள அட்டைகள், பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்; வைத்து புதன்கிழமை (17) வழங்கப்பட்டன.

சிறுவர்களின் கண்காணிப்பு மற்றும் அவர்களின் நலன் சார்ந்த விடயங்களில் கிராம மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு வசதியாக இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாக மண்முணை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

மேலும், சிறுவர் துஷ்பிரயோகங்களையும் நெறிபிறழ்வான நடத்தைகளையும் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இக்குழுச் செயற்படுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X