2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குற்றத் தடுப்பு கைநூல் கையளிப்பு

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

குற்றங்களில் இருந்து விலகி இருப்பது எப்படி என்ற விரிவான விளக்கங்களைக் கொண்ட குற்றத் தடுப்புக் கைநூல், தொழிற் பயிற்சி நிலையங்கள், பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கல்வியியற் கல்லூரி, பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் விநியோகிக்கப்பட்டு வருவதாக,  கிழக்கு மாகாணத்துக்கான சமூகப் பொலிஸ் பிரிவு ஒருங்கிணைப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரெட்ணம் தெரிவித்தார்.

இதனடிப்படையில், இலங்கை தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையின் வந்தாறுமூலை மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையத்தில், தொழிற்துறைப் பயிலுநர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக, இந்தக் கைநூல் நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.பி. நழீமிடம், பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரெட்ணம், இன்று கையளித்தார்.

இலங்கை தேசிய தொழிற் பயிற்சி அதிகாரசபையின் வந்தாறுமூலை மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையத்தில், 10 தொழிற்றுறைப் பயிற்சிநெறிகளில் சுமார் 170 பயிலுநர்கள், பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு, போதைப்பொருள் பாவனையின் தீங்கு, வீதிப் போக்குவரத்து ஒழுங்குமுறை, விபத்துகளைத் தடுத்தல், போக்குவரத்து விதிமுறைகளும் வீதி ஒழுக்கங்களும் சம்பந்தமான விழிப்புணர்வுச் செயலமர்வுகளை, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. அரசரெட்ணம், சமீபத்தில்  நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .