2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது

Niroshini   / 2015 நவம்பர் 03 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சத்துருக்கொண்டான் சர்வோதய பகுதியில் வைத்து 2006.11.30ஆம் திகதி ஐயாத்துரை வாசுதேவன் என்பவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சத்துருக்கொண்டான் பிரதேசத்தினை சேர்ந்த பா.பார்த்தீபன் என்பவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக இவர் தேடப்பட்டுவந்த நிலையிலேயு இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X