2025 மே 07, புதன்கிழமை

கொழும்பு –மட்டு. ரயில் சேவைக்கான முற்பதிவு கணினி மயம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவையின் இருவழிப்பாதைக்கான முதலாம் வகுப்பு படுக்கை அறைக்கான முற்பதிவு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதியிலிருந்து கணினி மயப்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு ரயில் நிலைய பிரதம அதிபர் தெரிவித்தார்.  

கணினி மயப்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் பிரயாணத் திகதியிலிருந்து 45 நாட்கள் முற்கூட்டி பிரயாணப் பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.

இவ்வாறிருக்க, தினந்தோறும் அதிகாலை 5.10 மணிக்கு கல்லோயாசந்திக்கு சென்று திரும்பிவரும் ரயில் பஸ்சேவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதியிலிருந்து இரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X