Suganthini Ratnam / 2016 நவம்பர் 24 , மு.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், நல்லதம்பி நித்தியானந்தன்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக முன்றலில் வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டு 10 வருடங்களாகின்றன. இந்நிலையில், அப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள், நிர்வாக உத்தியோகஸ்தர்கள் சங்க உத்தியோகஸ்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் சங்க அதிகாரிகள், கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் உபவேந்தராக கடமையாற்றிய காலப்பகுதியில் 15.12.2006 அன்று கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், அக்காலத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த தலைநகர் கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டார். 10 வருடங்கள் கடந்துள்ளபோதிலும், இதுவரையில் அவர் தொடர்பாக எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை.
இதன்போது, கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் காலாநிதி ஜே.கென்னடி தெரிவிக்கையில்,'முன்னாள் உபவேந்தர், பேராசிரியர், சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டமை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பேரிழப்பாகும். இவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்' என்றார்.
9 hours ago
21 Dec 2025
dwason Friday, 25 November 2016 05:53 AM
It seems to think that the demogracy is still alive
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025