2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு பல்கலையில் காணாமல்போன 158 பேரை நினைவுகூர்ந்து பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வந்தாறுமூலை, கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த வேளையில் இராணுவச் சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் 158 தமிழர்களின் 25ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு, பூஜை வழிபாடுகளுடன்  நேற்று ஞாயிற்றுக்கிழமை உறவினர்களினால் நினைவுகூரப்பட்டது.  

1990ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு நிமித்தம் தஞ்சமடைந்திருந்தபோது, சுற்றிவளைப்புச் செய்து விசாரணைக்காக பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்ட 158 பேரை  நினைவுகூர்ந்து உறவினர்களினால் வீடுகளிலும் கோவில்களிலும் பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஏறாவூர் 04ஆம் குறிச்சி வரசித்தி விநாயகர் கோவிலிலும் இவர்களை நினைவுகூர்ந்து  பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. இதன்போது, கோவில் வளவில் காணாமல் போனோரின் நினைவாக தென்னைமரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

1990ஆம் ஆண்டு செப்டெம்பர் 05ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தில் அகதி முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அகதி முகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த சுமார் 45 ஆயிரம்  தமிழர்கள்  தஞ்சமடைந்திருந்ததாக  அந்நேரம் அந்த முகாமை நிர்வகித்த பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X