Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பற்றுள்ள இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கி தொழில் உற்பத்திகளை மேற்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நாட்டு அரசாங்கம் 20 மில்லியன் டொலர் நிதியை கிழக்கு மாகாண சபைக்கு வழங்கவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி தெரிவித்தார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டுக்கும் இடையிலான சந்திப்பு, கல்லடியிலுள்ள ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார்.
மேலும் தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்பற்றுள்ள இளைஞர், யுவதிகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்குகின்றது. எதிர்காலத்திலும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக அவுஸ்திரேலியா அரசாங்கம் உதவத் தயாராகவுள்ளது'
கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் முதலமைச்சரிடம் கேட்டறிந்துகொள்ளப்பட்டுள்ளது' என்றார்.

1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025