Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன்
கிழக்கு மாகாணத்தின் உண்மையைப் பிரகடனப்படுத்தும் குழுமத்தின் அமர்வு, மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இன்று நடைபெற்றது.
இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் செயற்படுத்தப்படும் சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில் இந்த அமர்வு நடைபெற்றது.
கடந்த யுத்தம் காரணமாக நேரடியாக அல்லது மறைமுகமாகப் பாதிக்கப்பட்ட 09 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அனுபவங்கள் இந்த அமர்வில் முன்வைக்கப்பட்டதாக இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் கருத்திட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உரிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதே இந்த அமர்வின்; பிரதான நோக்கங்களில் ஒன்று என மேற்படி பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago