2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் 4,927 ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2017 மே 03 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளது என மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் செவ்வாய்க்கிழமை (2) நடைபெற்ற கல்வி அதிகாரிகள், கல்விப் பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், துறைசார்ந்த ஆசிரியர்கள் ஆகியோருடனான சந்திப்பு நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் மேலதிகமாக ஆசிரியர்கள் இல்லை என்பதுடன், அந்த மாகாணத்தில் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுகின்றது  என்பது தொடர்பான புள்ளிவிவரத் தகவலை மத்திய அரசாங்கத்திடம்  கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் கடந்த செப்டெம்பரில் சமர்ப்பித்திருந்தார்.

2016ஆம் ஆண்டு ஆளணித் தேவையின் அடிப்படையில் இந்த நியமனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
ஆளணியை நிறைவு செய்து வெற்றிடங்களை நிரப்புதவதற்காக அனைத்து உயர்மட்ட அதிகாரிகளையும் அழைத்து பிரதமரின்; அலுவலகத்தில் அண்மையில் கூட்டமொன்று நடைபெற்றது.

இதனை அடுத்து, தற்போது கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு 4,927 ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. ஓரிரு மாதங்களுக்குள் எல்லா நியமனங்களும் நிரப்பப்பட்டு விடும்.

இந்த நியமனம் வழங்கப்படும்போது, இடமாற்றப் பிரச்சினை இருக்காது. அந்தந்தப் பிரதேசங்களிலிருந்து ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதும் ஒரு தகைமையாகப் பார்க்கப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

மேலும் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நியமனத்தின்படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 457 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.  

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவுக்கும் ஆளணியை நிரப்புவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X