2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் வீடுகள் தேவை

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், தீஷான் அஹமட்  

கிழக்கு மாகாணத்தில் வீட்டு வசதியின்றி குடும்பங்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக குறைந்தபட்சம் 25 ஆயிரம் வீடுகள் தேவைப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்கம், சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள், தனியார் துறையினர், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு,  திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

வறுமை, யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு கிழக்கு மாகாணத்தில்  வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் பற்றி இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இம்மாகாணத்தில் காட்டு  யானைகளின் தொல்லையால் பலரது வீடுகள் தேமாக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்தி கிழக்கு மாகாணத்தின் வீடமைப்புத் துறையிலுள்ள பிரச்சினையைத் தீர்க்க  வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இம்மாகாணத்தில் வீட்டுத் திருத்த வேலைக்கு பொதுமக்கள் இலகுவில் உதவி பெற்றுக்கொள்ளும் பொறிமுறை கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி உருவாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் மாகாண முதலமைச்சர் எடுத்துக்கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .