2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணத்தில் முதலாவது சிறந்த தபால் சேவகருக்கான விருது

Niroshini   / 2015 நவம்பர் 02 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

கிழக்கு மாகாணத்தில் முதலாவது சிறந்த தபால் சேவகருக்கான விருது கல்முனை தபாலகத்தில் சேவையாற்றும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை தியாகமூர்த்திக்கு கிடைத்துள்ளது

இலங்கை அஞ்சல் சேவை வரலாற்றில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தபால் அலுவலகத்தில் கடமையாற்றும் இவர் கிழக்கு மாகாணத்தில் முதலாவது சிறந்த தபால் உத்தியோகத்தராக தெரிவு செய்யப்பட்டு கல்முனை தபால் அலுவலகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அண்மையில் அக்கரைப்பற்று அதாவுல்லா கலையரங்கில் நடைபெற்ற 141ஆவது உலக அஞ்சல் தின நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் எஸ்.விவேகானந்தலிங்கத்தினால் சிறந்த தபால் சேவைக்கான நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சிறந்த சமூக சேவையாளராகவும் மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள இவர் சமாதான நீதவானாகவும் அகில இலங்கை தபால் தந்தி தொடர்புகள் சங்க கல்முனைக் கிளையின் செயலாளராகவும் சேவையாற்றி வருகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X