2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கு மாகாணத்திலுள்ள வெற்றிடங்கள் தொடர்பான அறிக்கை திறைசேரிக்கு அனுப்பிவைப்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 30 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பைஷல் இஸ்மயில்,ரீ.எல்.ஜவ்பர்கான்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அரசாங்கப் பதவி வெற்றிடங்கள் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய 3,000 பக்கங்களைக் கொண்ட  அறிக்கையை திறைசேரிக்குப் புதன்கிழமை (29) அனுப்பி வைத்ததாக  மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மாகாணத்திலுள்ள 37  கல்வி வலயங்களில் காணப்படும்  வெற்றிடங்களை  உள்ளடக்கிய தரவுகளைத்  தொகுத்துள்ளதுடன், மாகாணத்தின் 3 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக தலா 1,000 பக்கங்களைக் கொண்ட 3 அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டன.  

அவற்றில் வெற்றிடங்களை  உடனடியாக நிரப்ப வேண்டிய  அவசியம் பற்றி வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

தொகுக்கப்பட்ட வெற்றிடங்கள் அடங்கிய சகல  ஆவணங்களையும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கும் அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த  14ஆம் திகதி  முதலமைச்சரின் பங்கேற்புடன் திறைசேரியில்  நடைபெற்ற கூட்டத்தின்போது, கிழக்கு மாகாணத்தின்; சகல தரவுகள் அடங்கிய  ஆவணங்களை  இரண்டு வாரங்களுக்குள்  திறைசேரி மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திடம் கையளிக்குமாறு பிரதமரின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் பணிப்புரை விடுத்திருந்திருந்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X