Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
“எதிர்வரும் மாகாண சபை தேர்தலில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது பலத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, என்னையும் எமது கட்சியையும் அழித்துவிடவேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டுள்ள சில தலைவர்களுக்கு பாடம் புகட்டுவேன்” என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாக கருதப்படும் வாகரை பகுதிக்கு விஜயம் செய்த அவர், அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.
நாடாளுமன்ற தேர்தல் நிறைவுபெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிபெற்ற சந்திரகாந்தன், சிறையிலிருந்து விடுதலையானதும் முதன்முறையாக வாகரைக்கு சென்ற நிலையில், அங்கு மக்களால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வாகரையின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர், அங்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார்.
குறிப்பாக, வாகரை பகுதியில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள், கல்வி நிலைமைகள், உட்கட்டமைப்பு வசதிகளை பூர்த்திசெய்தல் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், “நான் மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையிலும் வாக்களித்து மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பத்தை வழங்கிய மக்களுக்கு நன்றி. மட்டக்களப்பு மாவட்ட கல்வி நிலையை ஆராய்ந்தபோது, கல்குடா வலயம் மிக மோசமான பின்னடைவு நிலையில் இருக்கின்றது. நூற்றுக்கணக்கான ஆசிரியர் தட்டுப்பாடுகள் உட்பட பலர் விடயங்கள் காணப்படுகின்றன.
“அத்துடன், வாகரை பிரதேசத்தில் அதிகமான நிலம் இருக்கின்றது. இறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்புக்கு என்று 2017ஆம் ஆண்டு 1,100 ஹெக்டர் நிலம் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் பயன்படுத்தி, முதலீடுசெய்து உழைக்கின்ற இளைஞர்களை உருவாக்குகின்ற பொறுப்பு இருக்கின்றது. அதற்கான பணிகளை அரசாங்கத்துடன் இணைந்து செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். தொடர்ந்தும் உங்களுக்காக பணிசெய்வேன். இறக்கும் வரையில் உங்களுடன் நிற்பேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
54 minute ago
59 minute ago