2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்கின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மதுபாவனையை ஒழிக்கும் வகையில் விசேட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

இதன்கீழ், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்பெற்ற தகவலின் அடிப்படையில், வவுணதீவு பொலிஸ் பிரிவூக்குட்பட்ட பகுதியில்,  நேற்று (11) பாரியளவில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளும் நிலையமொன்று, பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

வவுணதீவு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமியின் தலைமையில், வவுணதீவு, நெடுஞ்சேனை பகுதியிலுள்ள ஆற்றுப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த முற்றுகையின் போது, 15 பரல்களில் இருந்து சுமார் 1,500 லீற்றர் கசிப்பு காய்ச்சுவதற்கான கோடா மீட்கப்பட்டு, அழிக்கப்பட்டதுடன், சுமார் 200 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டது.

அத்துடன், கசிப்பு விற்பனைக்காக பயன்படுத்தப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X