Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் இருந்து சத்துருக் கொண்டான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற ஒருவரை, வலையிறவு பாலத்தில் வைத்து கைது செய்ததுடன், 12 லீற்றர் கசிப்பையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக, மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து, மட்டு. தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி. கே. ஹட்டியாராச்சியின் ஆலோசனைக்கமைய, பொலிஸ் புலனாய்வு பிரிவு சாஜன் ஏ.ஏ.ஜெமில் தலைமையிலான புலனாய்வு பிரிவினர், வலையிறவு பாலத்தில் நேற்று (16) கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வவுணதீவு பிரதேசத்தில் இருந்து மட்டு. நகர் பகுதிக்கு குறித்த பாலத்தினூடாக மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்திச் சென்றவரை வழிமறித்து சோதனையிட்டபோது, மோட்டார் சைக்கிளில் 02 கலன், போத்தலில் கசிப்பு எடுத்துச் செல்வதை கண்டு பிடித்ததையடுத்து, அவரை கைது செய்ததுடன், 12 லீற்றர் கசிப்பை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் ஓசானம் சத்துருக் கொண்டான் பிரதேசத்தை சோந்த இளைஞர் எனவும் வவுணதீவு பாவக்கொடிச்சேனை பிரதேசத்தில் இருந்து வியாபாரத்துக்காக கசிப்பை எடுத்துச் சென்றதாகவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
45 minute ago
1 hours ago