2025 மே 19, திங்கட்கிழமை

கச்சக்கொடி பாலர் ஓடை அணைக்கட்டு திறந்து வைப்பு

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஜனவரி 23 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி, சுவாமி மலை கிராமத்தின் நீர்த்தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட கச்சக்கொடி, பாலர் ஓடை அணைக்கட்டை, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமார், இன்று (23) திறந்துவைத்தார்.

கமநல சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் பொறியியலாளர் என். சிவலிங்கம் தலைமையில், இத்திறப்புவிழா நடைபெற்றது.

கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டில், 7.5 மில்லியன் ரூபாய் செலவில் 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம், கச்சக்கொடி, சுவாமிமலை உள்ளிட்ட அருகிலுள்ள பிரதேசங்களுக்கு நீர் வழங்குதல், மேட்டு நிலப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமி மலை குடிநீர்த்தட்டுப்பாடு, விவசாய நீர்ப்பாசனப் பிரச்சினை, யானைப் பிரச்சினை, வருமானப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்ளும் பிரதேசமாகும்.

கச்சக்கொடி - பாலர் ஓடை அணைக்கட்டு அமைக்கப்பட்டதன் மூலம், சுற்றயலிலுள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X