2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 24 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா, த.தவக்குமார்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேரை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை ஏறாவூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளதுடன், இவரிடமிருந்து 08 கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

இது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபரின் வீட்டைச் சோதனையிட்டபோது, கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இது இவ்வாறிருக்க, கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை மண்டூர், பாலமுனைப் பகுதியில் சனிக்கிழமை (23) இரவு கைதுசெய்துள்ளதுடன், இவரிடமிருந்து 400 கிராம் கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த இச்சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X