Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 12 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
ஓட்டமாவடி, மாஞ்சோலைப் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரொருவரை, இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை நீதிபதி எச்.எம்.எம்.பஸீல், இன்று (12) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கும் வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கும் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வவுணதீவு விசேட அதிரடிப்படைக் படையினரின் உதவியுடன் மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபரிடமிருந்து 1,775 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இவர், இதற்கு முன்னரும் பல தடவைகள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் என்றும், பிரதேசத்தில் பிரபல வியாபாரி என்றும், வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
44 minute ago