2025 மே 07, புதன்கிழமை

கடைகளுக்கு லேகியம் விநியோகித்தவர் கைது

Kogilavani   / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்  

பொதிசெய்யப்பட்ட லேகியத்தை கடைகளுக்கு விநியோகித்த நபரொருவரை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளதுடன் அதற்கு பயன்படுத்திய வாகனத்தையும் கல்முனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மொனராகலையைச் சேர்ந்த தெல்கம விதானகே சமந்த (வயது 46) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து இந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவரிடமிருந்து போதையூட்டப்பட்ட 24 கிலோகிராம் 300 கிராம் கொண்ட 1650 லேகிய பக்கெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர் நீண்டகாலமாக லேகிய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X