Niroshini / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள், கடந்த நான்கு மாத சம்பளமும் முப்பது சதவீத நிலுவையும் வழங்குமாறு கோரி நடத்தி வந்த ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை மாலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
தங்களது சம்பள நிலுவையை வழங்கக் கோரி கடந்த 18.09.2015ஆம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடத்தி வந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து 19 நாட்கள் இடம்பெற்று வந்த நிலையில், இன்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் மேலதிக செயலாளர் குசும் பியரத்ன அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கடதாசி ஆலையின் பொது முகாமையாளர் அனுர ரணவீர ஆகியோர் வருகை தந்து,சம்பள நிலுவையை ஒரு வார காலத்துக்குள் வழங்கப்படும் என்றும் அதற்கு தான் முன் நிற்பதாகவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் மேலதிக செயலாளர் குசும் பியரத்ன வழங்கிய உறுதிமொழியை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
அமைச்சின் செயலாளர் தெரிவித்தது போல் ஒரு வாரத்துக்குள் சம்பளம் வழங்கப்படாமல் இருக்குமேயானால் எமது போராட்டம் தொடரும் என்று ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
3 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Dec 2025