Freelancer / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
பொலன்னறுவை, கிரித்தலை பிரதேசத்தில் இருந்து காத்தான்குடி பிரதேசத்துக்கு லொறியில் சட்டவிரோதமாக எருமை மாடுகளை கடத்திச் சென்ற ஒருவரை காத்தான்குடி கடற்கரை வீதியில் வைத்து நேற்று (06) அதிகாலை மாவட்ட குற்ற விசாரணப் பிரிவினர் கைது செய்ததுடன் ஆறு எருமை மாடுகள் லொறி ஒன்றையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து மாவட்ட குற்ற விசாரணப் பிரிவு பொறுப்பதிகாரி, உபபொலிஸ் பரிசோதகர் டிலங்கவெலவின் ஆலோசனையில் சப்இன்பெக்ஸ்டர் ஆர்.எம்.ஆர் சதுரங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவதினமான நேற்று அதிகாலை காத்தான்குடிகடற்கரை வீதியில் வைத்து குறித்த லொறியை மடக்கிபிடித்து
சோதனையிட்டனர்.
இதன் போது லொறியில்ஆறு எருமை மாடுகளை கடத்தியமைக் கண்டுபிடித்து லொறியின் சாரதியை கைது செய்ததுடன் ஆறு மாடுகளையும் லொறியையும் மீட்டனர். R
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025