2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கடந்த 4 தினங்களில் 487 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் 487 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் இன்று  புதன்கிழமை காலை 8.30 மணி வரையே இந்த மழை வீழ்ச்சி  பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிவரை 90.7 மில்லிமீற்றரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 8.30 மணிவரை 182.9 மில்லிமீற்றரும்; திங்கட்கிழமை காலை 8.30 மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை 148.6 மில்லிமீற்றரும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 54.8 மில்லிமீற்றரும் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X