Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
“மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றால் 2017ஆம் ஆண்டில் சிறு குற்றமிழைத்த 278 பேர், சமுதாயஞ்சார் சீர்திருத்த கட்டளைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்” என, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடைமை புரியும் சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் கனகசபை சுதர்ஷன் தெரிவித்தார்.
இது குறித்த மேலும் அவர் தெரிவிக்கையில்,
“சிறு குற்றமிழைத்த இவர்களுள் 268 ஆண்களும் 10 பெண்களும் அடங்குகின்றனர்.
“இவர்களில் 78 பேர், சட்டவிரோத மது விற்பனையிலும் 150 பேர், மதுபோதையில் பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்த குற்றச் சாட்டிலும், 24 பேர், தம்வசம் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததாலும், 06 பேர் சட்ட விரோதமாக சூதாடிய குற்றத்திலும், 02 பேர், தம்வசம் சட்டவிரோதமாக ஹெரோய்ன் வைத்திருந்த குற்றத்திலும், 18 பேர், திருடியமை போன்ற ஏனைய குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்களாவர்.
“இவ்வாறானவர்கள், மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாதிருக்கவும் தங்களை சீர்திருத்திக் கொள்ளவும் பொருத்தமான ஆலோசனைகளும் வழிகாட்டல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
“தனி உளவள ஆலோசனை, குடும்ப உளவள ஆலோசனை, குழு உளவள ஆலோசனை, ஆன்மீக ரீதியான நல்வழிப்படுத்தல் (தியானம், ஜெபம், பயான்) போதைப் பாவனையும் அதன் பாதிப்பு தொடர்பான பரவலான விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுத்தல், சிறுதொழிற் பயிற்சிகளை பெற்றுக் கொடுத்தல் (காகித உறை, மெழுகுதிரி, வீட்டுத் தோட்டம்) மருத்துவ சிகிச்சை தேவையானோருக்கான வசதிகளை பெற்றுக் கொடுத்தல், போதைப்பாவனைக்கு அடிமையானோருக்காக புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் போன்ற ஆக்கபூர்வமான சமுதாய சீர்திருத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
37 minute ago
2 hours ago