2025 மே 16, வெள்ளிக்கிழமை

கடமைக்கு இடையூறு; கவனயீர்ப்பு முன்னெடுப்பு

வா.கிருஸ்ணா   / 2018 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் உத்தியோகத்தர்களும் உறுப்பினர்களும், கொக்கட்டிச்சோலையிலுள்ள பிரதேசசபைக்கு முன்பாக ஒன்றுகூடி, இன்று (08) காலை கவனயீர்ப்பு போராட்டமென்றை முன்னெடுத்தனர்.

கொக்கட்டிச்சோலைப் பகுதியில் கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, சிலர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன், உத்தியோகத்தர் ஒருவர் மீதும் தாக்குதலும் நடத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இவ்வாறான நிலையில், பிரதேசசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தமது கடமையை செய்யமுடியாத நிலையேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கால்நடைகளால் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் பெருமளவான விபத்துகள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் கால்நடை வளர்ப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டபோதிலும் அவர்கள் தொடர்ந்தும் வீதிகளில் கால்நடைகளை அலையவிடுவதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தக் கவனயூர்ப்புப் போராட்டத்தில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் புஸ்பலிங்கம், சபையின் செயலாளர்கள், உத்தியோகத்தர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .