2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கடற்கரைப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 18 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
கிழக்கு மாகாணத்தில் வெற்று நிலமாகக் காணப்படும் கடற்கரைப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு, புன்னைக்குடா கடற்கரைக்கு இன்று திங்கட்கிழமை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானவும் விஜயம் செய்தனர்.  

கடந்த யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரைப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. பல இடங்கள் வெற்று நிலங்களாக காட்சியளிக்கின்றன.
 
கிழக்கு கடற்கரைப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க முடியும். கடற்கரைப் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அதிகாரிகளை பணித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X