2025 மே 08, வியாழக்கிழமை

கடற்கரையை அண்மித்த பகுதிகளை அழகுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு கடற்கரையை அண்மித்த பகுதிகளை தூய்மைப்படுத்தி அழகுப்படுத்துவது குறித்து, உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (11) நடைபெற்றது.

மாவட்ட பிரதம கணக்காளர் நேசராஜா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், தேசிய கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் முகாமைத்து பொதுமுகாமையாளர் நிமால், கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கோகுலதீபன், தேசிய  கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கே.சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய கரையோர தூய்மைப்படுத்தும் தினத்தினை முன்னிட்டு, கடற்பரப்பில் இருந்து 50 கிலோமீற்றர் வரை உள்ள கடற்கரை பிரதேசம் தூய்மைப்படுத்தப்படவுள்ளது.

எட்டு பிரதேச செயலகங்களினையும் 25 பிரிவுகளாக பிரித்து, இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இதற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொலிஸ், இராணுவம், கடற்படை, மற்றும் பொதுமக்களின் உதவிகளும் பெறப்படவுள்ளது.
 

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X