2025 மே 01, வியாழக்கிழமை

கடற்கரையில் மர்மப்பொருள்: மீனவர்கள் அச்சம்

Mayu   / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டம் கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருளொன்று  இன்று (28) காலை ஒதுங்கியுள்ளது.

அப்பகுதி கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர். 

இந்நிலையில் அப்பொருள் இன்று (28) காலை  கரை ஒதுங்கியுள்ளதாக  மீனவர்கள்  தெரிவித்தனர்.

இந்நிலையில், கரை  ஒதுங்கியுள்ள  பொருள் இப்பொருள்  தொடர்சியாக இவ்விடத்திலேயே  இருக்குமாக இருந்தால் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும் எனவே  இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்இ இதனை களுவாஞ்சிகுடி பொலிஸாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில P.ஆ.வு. எனவும் பின்பக்கம் (P) என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வ.சக்தி

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .